உலகத் தமிழர்களுக்கு ஒரு அவசர வேண்டுகோள்: விரைவாகச் செயல்படுவோம்
தமிழ் மக்களுக்கும், நாளிதழ்களுக்கும் ஒரு வேண்டுகோள் இலங்கையில் போரின் போது நடைபெற்ற குற்ற செயல்களின் உண்மை நிலையை ஆராயும் குழு ஒன்றை ஐக்கிய நாடுகள் சபை நிறுவியுள்ளதை யாவரும் அறிவோம்.இவர்களை இலங்கைக்குள் அனுமதிக்கப்போவது இல்லை என மகிந்த அரசு அறிவித்துள்ளது. அதனால் இக் குழு இலங்கை சென்று தனது ஆதாரங்களைத் தேடாமல், மக்களால் கொடுக்கப்படும் ஆதாரங்கள் மற்றும் உண்மைச் சம்பவங்களைப் பதிவுசெய்யும் வாய்ப்பு கிட்டியுள்ளது எனலாம். நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள், மற்றும் புகைப்படங்கள், ஆவணங்கள் போன்றவற்றை வைத்திருப்போர் உடனடியாக இக் குழுவை மின்னஞ்சல் மூலம் தொடர்புகொள்ளலாம் !
இந்தோனேஷியாவின் முன்னாள் சட்ட மா அதிபர் மர்சுகி தருஸ்மன் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இக்குழுவில் அமெரிக்க வழக்கறிஞர் ஸ்டீவன் ரட்ணர், தென்னாபிக்காவின் உண்மை நல்லிணக்கம் தொடர்பான ஆணைக்குழுவில் பணியாற்றியவரும் அந்த நாட்டை சேர்ந்தவருமான யஸ்மின் சூகா ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
எனவே ஒவ்வொரு தமிழர்களும் அக்குழுவினர்களுக்கு மின்னஞ்சல் வாயிலாக போர்க்குற்ற புகைப்படங்களையும், காணொளிகளையும், ஆவணங்களையும் அனுப்பி வைப்போம். ஒவ்வொரு இணையத்திலும் இச்செய்தியினை வெளியிடுமாறு பணிவுடன் கேட்டுகொள்கிறோம், இதில் வேறுபாடுகளை மறந்து தமிழினத்துக்காக, அங்கே கொல்லப்பட்ட 40,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எமது உறவுகளுக்காக இதை நாம் உடனே செய்தாகவேண்டும். மேலும் நண்பர்களுக்கும், தமிழ் உறவுகளுக்கும் இந்த மின்னஞ்சல்களை தெரியபடுத்தவும்.
சகல தமிழ் இணையங்களும், ஐ.நா.சபையின் நிபுணர் குழுவுக்கு மின்னஞ்சல் அனுப்பும் இவ்விடையத்தை செய்தியாகபிரசுக்கவும்.
---------------------------------
1) Ms. Sooka Yasmin
Executive Director
Foundation for Human Rights
Her E-Mail: YSooka@fhr.org.za
----------------------------------------------
2)Mr. Steven R. Ratner
Bruno Simma Collegiate Professor of Law,
University Of Michigan Law School,
United States of America
His E-mail: sratner@umich.edu
------------------------------------------
3)Mr. Marzuki Darusman
c/o: Office of the Secretariat,
Working Group for an ASEAN Human Rights Mechanism
Office and Mailing Address:
Ground Floor, Ateneo Human Rights Center
Ateneo Professional Schools , 20 Rockwell Drive ,
Rockwell Center , 1200 Makati City ,
Metro Manila , Philippines
His E-mail: info@aseanhrmech.org
Read More Srilanka's Genocide ,,,,,
-
-
-
‘Boycott Sri Lanka’ campaign continues in UK - [image: Boycott Sri Lanka Airlines]*A public awareness campaign asking shoppers in Britain to boycott products made in Sri Lanka and sold in popular stores...13 years ago
-
-
0 Responses to “உலகத் தமிழர்களுக்கு ஒரு அவசர வேண்டுகோள்: விரைவாகச் செயல்படுவோம்”: